தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி: மகிழ்ச்சியில் பயணிகள்

DIN


சென்னை: சென்னை விமான நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக, இரண்டு புதிய கண்ணாடியால் ஆன மின் தூக்கிகள் சேவை நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மின் தூக்கியும் தலா 20 பேரை தூக்கிச்செல்லும் திறன் படைத்ததாகவும், 360 டிகிரி கோணத்தில் உள்ளேயிருந்து விமான நிலையத்தை பார்க்கும் வகையில் கண்ணாடியால் ஆனதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மின் தூக்கிகள் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், வருகை, புறப்பாடு மற்றும் உள்ளூர், வெளிநாட்டு விமான முனையங்களுக்கு மிக எளிதாகச் செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது.

இந்த மின் தூக்கிகளுக்கு உள்ளேயிருக்கும் வெளியேயிருந்தும் பார்க்க முடியும் என்பதால் பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT