சதுரங்க கரை பதித்த வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி 
தமிழ்நாடு

சதுரங்க கரை பதித்த வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி

சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடி, சதுரங்க கரை பதித்த, தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டையில் வருகை தந்துள்ளார்.

DIN


சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடி, சதுரங்க கரை பதித்த, தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டையில் வருகை தந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்குச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டரங்கத்துக்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் பல்வேறு மணற்ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களைக் கவர்ந்தார் ஓவியர் சர்வம் படேல். பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினின் மணற் ஓவியங்களை வரைந்து சர்வம் படேல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். மாமல்லபுரத்தில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டுள்ளனர். வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழாவில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு நடந்தது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை வண்ணமயமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் போட்டியைத் தொடக்கிவைக்கிறாா்.

இதற்காக பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகை தர திட்டமிடப்பட்டது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் வருகை சற்று தாமதமானது.

தற்போது பிரதமர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் 5.45 மணிக்கு ஐஎன்எஸ் அடையாறு சென்றார். அங்கிருந்து காா் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு புறப்பட்டார் பிரதமா் மோடி. அவர் வருகை தரும் வழிநெடுகிலும் கலை நிகழ்ச்சிகள் மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்னும் சில நிமிடங்களில் நேரு விளையாட்டரங்கிற்கு வருகை தரவிருக்கும் மோடி செஸ் ஒலிம்பியாட்டை தொடக்கி வைக்கவிருக்கிறார்.

தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் பங்கேற்றுள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற 8 வகை நடனங்களும் இடம்பெற்றுள்ளன. இசையில் சிறந்த கலைஞர்கள் தங்களது இசையால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT