முகப்பு
தமிழ்நாடு

போடியில் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் வெட்டிக் கொலை: பட்டப் பகலில் கொடூரம்!

போடியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலைமை தபால் நிலையம் அருகே தங்கும் விடுதி உரிமையாளர், வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
பகிர்:

போடி: போடியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலைமை தபால் நிலையம் அருகே தங்கும் விடுதி உரிமையாளர், வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் போடி ஜக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (70). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் போடியில் தனியார் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். சனிக்கிழமை பகலில் போடி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் இரு சக்கர வாகனத்தில் வந்தவருடன் மர்ம நபர்கள் 5 பேர் கொண்ட கும்பல் தகராறு செய்துள்ளனர். பின்னர் அவரை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். மர்ம கும்பல் அவர்கள் வந்த ஜீப்பில் தப்பி விட்டனர்.

கேரள பதிவெண் கொண்ட ஜீப் என்பது தெரிய வந்துள்ளதால் கொலையாளிகள் கேரளத்திலிருந்து வந்தவர்களா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கொலை சம்பவம் நடந்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போடி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →