முகப்பு
தமிழ்நாடு

ஆரூர் தாஸ், சண்முகநாதனுக்கு விருது: முதல்வர் வழங்கினார்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, வசனகர்த்தா ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர விருதும் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு 'கலைஞர் எழுதுகோல விருதும் வழங்கப்பட்டது.  

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:46 PM
பழம்பெரும் இயக்குநரும் வசன கர்த்தாவுமான ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர்' விருதை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். 
பகிர்:

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, வசனகர்த்தா ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர விருதும் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு 'கலைஞர் எழுதுகோல விருதும் வழங்கப்பட்டது.  

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், பழம்பெரும் இயக்குநரும் வசன கர்த்தாவுமான ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர்' விருதை இன்று வழங்கினார். சென்னை தி.நகரில் உள்ள ஆரூர் தாஸுன் வீட்டிற்கே சென்று விருதை வழங்கி கௌரவித்தார். மேலும் விருதிற்கான பரிசுத் தொகையான பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். 

Advertisement

இந்த நிகழ்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. டி.ஆர். பாலு, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் இருந்தனர். 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதனுக்கு 'கலைஞர் எழுதுகோல் விருதினை முதல்வர் வழங்கினார். 

அதேபோன்று, செய்தி மக்கள் தொடர்புத் துறை தரப்பில் மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதனுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து 'கலைஞர் எழுதுகோல விருதினையும் விருதிற்கான ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும் பாராட்டுச் சான்றிதழையும் முதல்வர் வழங்கினார். 

இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments