நெல்லை அருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர்களால் பதற்றம்
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் மர்ம நபர்கள் மது போதையில் பெட்ரோல் பங்க், உணவகம் உள்ளிட்ட ஊழியர்களை தாக்கி வெறிச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதிகளில
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் மர்ம நபர்கள் மது போதையில் பெட்ரோல் பங்க், உணவகம் உள்ளிட்ட ஊழியர்களை தாக்கி வெறிச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி, வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 6 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி உள்ளனர்.
சேரன்மகாதேவியில் உள்ள உணவகத்திற்கு சென்று அவர்கள் அங்குள்ள ஊழியர்களிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி உணவு பொட்டலங்களை பரித்து சென்றனர். அதனைத் தொடர்ந்து வீரவநல்லூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற ஆறு பேர் கொண்ட அந்த கும்பல் ஊழியர்களை தாக்கி தங்களது இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு தப்பிச் சென்றனர்.
மேலும், புதுக்குடி சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் சென்று அவர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி மதுபானங்களை பறித்துச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் இவர்கள் குறித்து வீரவநல்லூர் காவல்துறைக்கு புகார் வந்ததையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மர்மநபர்கள் வந்து சென்ற சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். அந்த காட்சிகளை வைத்து விசாரித்ததில் சேரன்மகாதேவியை சேர்ந்த சரவணன், ஐயப்பன், மகாலிங்கம் மற்றும் உருளி பிச்சையா உள்ளிட்ட 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் பஜார் பகுதியில் முகமூடி அணிந்த நபர்கள் தாக்கிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | ரயில்களில் உடைமைகளை எடுத்துச் செல்ல கட்டுப்பாடு: ரயில்வே நிர்வாகம்