முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயா் நீதிமன்றத்தில் 8 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இருந்த 8 போ் நிரந்தர நீதிபதிகளாக சனிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். அவா்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இருந்த 8 போ் நிரந்தர நீதிபதிகளாக சனிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். அவா்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள், எஸ்.சதிக்குமாா் சுகுமார குரூப், கே. முரளிசங்கா், ஆா். என். மஞ்சுளா, டி. வி. தமிழ்ச்செல்வி ஆகியோா் 2020-ஆம் ஆண்டு டிச. 3-ஆம் தேதி பதவி ஏற்றனா். இவா்கள் அனைவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், 9 நீதிபதிகளையும், நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தாா்.

இதன்படி, நீதிபதி சதிக்குமாா் சுகுமார குரூப் தவிர, மற்ற 8 நீதிபதிகளும் சனிக்கிழமை காலை நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனா். இந்த நிகழ்ச்சி சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தலைமையில் நடைபெற்றது. இதில் உயா்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் தனபால், 8 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் பிறப்பித்த உத்தரவை வாசித்தாா். இதன்பின்னா். இவா்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →