முகப்பு
தமிழ்நாடு

மகிழ்ச்சியான செய்தி: சரிவிலிருந்து மெல்ல மீளும் மேட்டூர் அணை நீர்மட்டம்

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,410 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
மகிழ்ச்சியான செய்தி: சரிவிலிருந்து மெல்ல மீளும் மேட்டூர் அணை நீர்மட்டம்
பகிர்:

சேலம்: காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,410 கன அடியாக அதிகரித்துள்ளது. 

 நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று காலை 114.63அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 114.75 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை  காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,417 அடியிலிருந்து வினாடிக்கு 10,410 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 85.34 டி.எம்.சியாக உள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →