தமிழ்நாடு

கரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்: கல்வித்துறை அதிர்ச்சி தகவல்

DIN

தமிழகத்தின் பல மாவட்டங்களில் திருமண வயதை எட்டுவதற்கு முன்பே கரோனா காலத்தில் பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்துவைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா காலத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகம் முழுவதும் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இந்த ஆய்வின் அடிப்படையில், 11-ம் வகுப்பைச் சேர்ந்த 417 பேரும், 12-ம் வகுப்பு மாணவிகள் 2 பேரும், 9-ம் வகுப்பு மாணவிகள் 37 பேரும், 10-ம் வகுப்பு மாணவிகள் 45 பேரும், 8-ம் வகுப்பு மாணவிகள் 10 பேரும் என மொத்தம் 511 மாணவிகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். 

திருமணமான மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து, அவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT