மன்னார்குடி ஜீயர் 
தமிழ்நாடு

இந்து மதத்தை எதிர்த்தால் பாஜக-வையும் எதிர்ப்போம்: மன்னார்குடி ஜீயர்

இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல பாஜகவையும் எதிர்ப்போம் என்று மன்னார்குடி ஜீயர் கூறினார்.

DIN


இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல பாஜகவையும் எதிர்ப்போம் என்று மன்னார்குடி ஜீயர் கூறினார்.

கடந்த மாதம் தஞ்சை அருகே களிமேடு பகுதியில் கோயில் திருவிழாவில் தீ விபத்து நேர்ந்த பகுதியை பார்வையிடச் சென்ற மன்னார்குடி செண்பக மன்னார் செண்ட அலங்கார ஜீயர், செய்தியார்கள் சந்திப்பின் போது, இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என கூறினார்.

ஜீயர் கருத்துக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் திராவிடர் கழகம் மற்றும் திமுக வழக்குரைஞர்கள் பிரிவு சார்பில் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல; பாஜகவையும் எதிர்ப்போம் என்று மன்னார்குடி ஜீயர் கூறினார்.

மேலும், சிதம்பரம் கோயில் விவகாரத்தில் அறநிலையத்துறை தலையிடுவது இந்து விரோத செயல் என கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT