தமிழ்நாடு

சோனியா காந்தி கோரிக்கையை ஏற்ற அமலாக்கத்துறை

DIN

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக கூடுதல் அவகாசம் தேவை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கோரிக்கையை அமலாக்கத் துறை ஏற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி, முதலாவதாக ராகுல் காந்தி ஜூன் 13 முதல் 21 வரை 5 நாள்கள் ஆஜராகினார். அவரிடம் 53 மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றது. 

முன்னதாக வழக்கில் தொடர்புடைய சோனியா காந்திக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால்  அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. அதனால், ஜுன் 23 ஆம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாலும் உடல்நிலை சீராக இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக மேலும் சில வாரங்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என அமலாக்கத் துறையிடம் சோனியா காந்தி கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் கோரிக்கையை அமலாக்கத்துறை ஏற்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், விசாரணைக்கு ஆஜராக மாற்றுத் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT