தமிழ்நாடு

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தார்கள்: யாரைச் சொல்கிறார் ஸ்டாலின்?

DIN


சென்னை: திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கவிருந்தது. ஆனால் மண்டபம் அமைந்திருக்கும் வானகரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மண்டபத்துக்கு வர தாமதமானதால் பொதுக் குழு 11 மணிக்குத் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முழக்கம் எழுந்துள்ளது. ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த மோதல் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்  இன்று (23-06-2022) சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் பெயர்த்தி தீப்தி - விஷ்வக்சேனா ஆகியோரின் திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்திப் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தின் வருவாய்த்துறை அமைச்சர் - மாவட்டக் கழகத்தின் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். இல்லத்தில் நடைபெறும் மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து, இந்த மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டுத் திருமணம் நடப்பதைப்போல எண்ணி நாமெல்லாம் கலந்துகொண்டு, இந்த நிகழ்ச்சியில் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

இன்னொரு பக்கத்தில் - திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அந்தப் பிரச்சினைக்கெல்லாம் போக விரும்பவில்லை. இது நம்முடைய வீட்டுத் திருமணம்.

அதில் நாம் தலையிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர்கள்தான் நம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறார்களாம். தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, தி.மு.க. அழிந்ததாக வரலாறு கிடையாது. எனவே அந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT