தமிழ்நாடு

ஓ. பன்னீர்செல்வத்தை நோக்கி தண்ணீர் பாட்டில் வீச்சு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அதிமுக பொதுக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 வரைவு தீர்மானங்களையும் நிறைவேற்றிக் கொடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி வழிமொழிய, மேடைக்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாகக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அதிமுகவின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11இல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் மேடையிலிருந்து வெளியேறினர். அப்போது கூட்டத்திலிருந்த அடையாளம் தெரியாத ஒருவர் ஓபிஎஸை நோக்கி தண்ணீர் பாட்டிலை வீசினார். இந்த காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப். 9-ல் ஐஃபோன் 17 அறிமுகம்! விலை குறையும் பழைய ஐஃபோன் மாடல்கள்!!

24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!

கூலி படத்தை முந்துமா? மதராஸி தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!

ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்

SCROLL FOR NEXT