'வேண்டும் வேண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும்' : ஸ்ரீவாருவில் முழக்கம் 
தமிழ்நாடு

'வேண்டும் வேண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும்' : ஸ்ரீவாருவில் முழக்கம்

அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.

DIN

சென்னை: அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.

அதிமுக பொதுக் குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார். அவர் உள்ளே வரும் போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் பலரும் கோஷம் எழுப்பிய நிலையில், அவர் ஸ்ரீவாரு மண்டபத்துக்குள் வந்த போது, வேண்டும் வேண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், ஓ. பன்னீர்செல்வத்தை வெளியே போகச் சொல்லியும் சில அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

ஒரு பக்கம் வேண்டும் வேண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முழக்கமும், வேண்டாம் வேண்டாம் இரட்டைத் தலைமை வேண்டாம் என்ற முழக்கமும் மண்டபம் முழுக்க எதிரொலித்து வருகிறது.

இதற்கிடையே, துரோகி என எழுந்த முழக்கத்தால் பொதுக் குழு மேடையிலிருந்து வைத்திலிங்கம் இறங்கிவிட்டார்.

அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளார். ஆனால், அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் தொடர்ந்து கோஷங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

'ஆயிரம் கைகள் மறத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைச்சர் வளர்மதி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

சிங்கவரம் ரங்கநாதா் கோயிலில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

முதல்வா் இன்று வெளிநாடு பயணம்

நகராட்சிப் பள்ளிக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் நன்கொடை

SCROLL FOR NEXT