லாரியின் பின்னால் மோதி நிற்கும் கார். 
தமிழ்நாடு

நின்ற லாரி மீது கார் மோதல்: 2 பேர் பலி

தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை காலை சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் 2 பேர் பலியாகினர்.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை காலை சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் 2 பேர் பலியாகினர்.

தஞ்சாவூர் அருகே தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் புதூர் பிரிவு சாலையோரம் செவ்வாய்க்கிழமை காலை லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் இந்த லாரியின் பின்னால் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் காரை ஓட்டிச் சென்ற வடக்குவாசல் ஜெபமாலைபுரத்தை சேர்ந்த கதிரவன் மகன் விஜய்(35), பயணம் செய்த டி.சி.டபிள்யூ.எஸ். காலனி பிருந்தாவனத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ஜெயராமன்(22) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு தேவதையே... அஞ்சனா ரங்கன்!

பாஜகவை எதிரி என்று சொல்லும் விஜய், எப்படி அதன்பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன்

இந்தியாவுக்கு வருவதில் கௌரவம்: மெஸ்ஸி

குஜராத் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு அதிகரிப்பு! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

வாட்ஸ்ஆப் vs அரட்டை! அதீத வரவேற்பைப் பெறுகிறது! முதலிடம்!!

SCROLL FOR NEXT