தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு
தமிழகத்தில் பின்பற்றப்பட்ட கரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பின்பற்றப்பட்ட கரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக அரசு அறிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருந்த நிலையில் தற்போது தொற்று குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை(மார்ச்-3) முதல் நீக்கப்படுகிறது.
மேலும், தொற்றுப் பரவலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நாளை முதல் மார்ச் 31 வரை கீழ்க்கண்ட செயல்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.
* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள்
500 நபர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும்.
* இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 250 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும்.
மேற்சொன்ன இரண்டு கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முகக் கவசம் அணியவும் சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியினையும் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.