முகப்பு
தமிழ்நாடு

வங்கக் கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 3 மார்ச், 2022 at 8:41 AM
பகிர்:

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகம் நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதனால், நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.