தமிழ்நாடு

ஓபிஎஸ் சகோதரர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்

வி.கே.சசிகலாவை சந்தித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

DIN

வி.கே.சசிகலாவை சந்தித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா வெள்ளிக்கிழமை பிற்பகல் திருச்செந்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதிக்கு வந்து தங்கினார். அங்கு வந்த ஓபிஎஸ் சகோதரர் ராஜா சசிகலாவை சந்தித்தார். 

இந்நிலையில், கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் ஓ.ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

மேலும் தேனி மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் எஸ். முருகேசன், தேனி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் வைகை கருப்புஜி ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

அதிமுகவில் சசிகலா, தினகரன் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறிவந்த நிலையில் தேனியில் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிவெடுக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் பேரவைத் தலைவர் பதவிக்கு ஜேடியு - பாஜக இடையே நீயா - நானா போட்டி!

புதுவையில் தொடர் மழை! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! | Rain | Shorts

திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாக மனைவியை கொன்ற கணவா்

தோல்விக்கு 100% பொறுப்பேற்கிறேன்! பிரசாந்த் கிஷோர்

தில்லியில் 2 சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT