முகப்பு
டிஜிபியானார் எம். ரவி: காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு பதவி உயர்வு
தமிழ்நாடு

டிஜிபியானார் எம். ரவி: காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் ஏடிஜிபியாக இருந்த தாம்பரம் காவல் ஆணையர் எம். ரவி, டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருடன் சேர்த்து காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
டிஜிபியானார் எம். ரவி: காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு பதவி உயர்வு
பகிர்:

தமிழகத்தில் ஏடிஜிபியாக இருந்த எம். ரவி, டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருடன் சேர்த்து காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கூடுதல் டிஜிபியாக பதவி வகித்துவந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சைபர் குற்றப்பிரிவு தலைவராக உள்ள ஏடிஜிபி அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ், டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையராக இருக்கும் ஏடிஜிபி எம் ரவி ஐபிஎஸ், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு தலைவராக பதவி வகித்து வரும் கே. ஜெயந்த் முரளி ஐபிஎஸ், டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசுப் பணியில் உள்ள ஏடிஜிபி கருணாசாகர்  ஐபிஎஸ், டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள், காவல்துறையின் ஏஎஸ்பி பதவியில் இணைவார்கள், பிறகு எஸ்பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி என அடுத்தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்று, காவல்துறையிலேயே உயர்ந்த பதவியாகக் கருதப்படும் டிஜிபி பதவியை அடைகிறார்கள். 
 
முழு கட்டுரையைப் படிக்க →