முகப்பு
தமிழ்நாடு

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவு

மத்திய அரசைக் கண்டித்து நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவு
பகிர்:

மத்திய அரசைக் கண்டித்து நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு திமுக முழு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல்” “தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல்” உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

மார்ச் 28 மற்றும் 29ஆம் தேதி நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இதுதொடர்பாக வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், மாநில அமைச்சருமான துரைமுருகன் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நாட்டைக் காப்போம் மக்களைக் காப்போம் எனும் முழக்கத்துடன் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் திமுகவினரும், திமுக தொழிற்சங்கத்தினரும் பங்கேற்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
--

முழு கட்டுரையைப் படிக்க →