முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், 

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 

24.03.22, 25.03.22: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26.03.22: தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27.03.22: தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28.03.22: தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)

கொடைக்கானல் 8, பிளவக்கல், ராஜபாளையம் 6, ஆண்டிபட்டி தலா 4, பில்லிமலை எஸ்டேட், கெட்டி, சின்னக்கள்ளர், ஆழியாறு, சிவகிரி, புதுச்சத்திரம் தலா 3, வால்பாறை தாலுகா அலுவலகம், அம்பாசமுத்திரம், சங்கரிதுர்க், சூலூர், ராசிபுரம், உதகமண்டலம், அவலாஞ்சி தலா 2, பல்லடம், பாப்பிரெட்டிப்பட்டி, அமராவதி அணை தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →