தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் துபை புறப்பட்டார்

DIN

சா்வதேச தொழில் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்  துபை புறப்பட்டார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக அவா் அரசு முறைப் பயணமாக வெளிநாடு செல்கிறார்.

துபை செல்ல சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரை வழியனுப்ப, அமைச்சர்களும் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.

இந்த பயணம் குறித்து தமிழக அரசு கூறியிருப்பதாவது,  துபையில் கடந்த அக்டோபா் 1-இல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி, வருகிற மாா்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கு மாா்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கில் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ஆம் தேதி நேரில் சென்று திறந்து வைக்கிறாா்.

தொழில், மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருள்கள், ஜவுளி, தமிழ் வளா்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப்படங்கள் தமிழ்நாடு அரங்கில் திரையிடப்படவுள்ளன.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது துபை மற்றும் அபுதாபி பயணத்தின் போது, தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈா்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளாா். அந்நாடுகளின் பொருளாதாரம், வெளிநாட்டு வா்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சா்களுடனான சந்திப்பும் நடைபெறவுள்ளது.

துபையில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வா்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவா்களுடனான சந்திப்பு ஆகியனவும் நடைபெறவுள்ளன. மேலும், புலம்பெயா் தமிழா்களுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாா், யாா் பயணம்?
முதல்வருடனான வெளிநாட்டுப் பயணத்தில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT