தமிழ்நாடு

இரவில் சைக்கிளில் ரோந்துப் பணி: சென்னை காவல் இணை ஆணையருக்கு முதல்வர் பாராட்டு

DIN

சென்னையில் இரவு நேரத்தில் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட காவல் இணை ஆணையர் ரம்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக ரம்யா பாரதி கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். அப்பகுதியில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறார். 

அவர் இரவு நேரங்களில் சைக்கிளில் சென்று ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு சென்னை பூக்கடை முதல் வண்ணாரப்பேட்டை பகுதி வரை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த காவலர்களின் பணி குறித்தும் ஆய்வு செய்தார். 

அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 

'ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன்.

தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT