முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை 

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை 
பகிர்:

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைப் பதிவில், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 14ஆம் தேதி கனமழை பெய்யும்

அசானி புயலானது வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரத்துக்கு அருகே நேற்று இரவு கரையை கடந்தது. 

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை குறித்த வானிலை முன்னெச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது.

அதில், வரும் 14ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →