தமிழ்நாடு

மே முதல்நாள் 347 ஆக இருந்தது இன்று 220 ஆனது: எது தெரியுமா?

DIN

சென்னையில் கரோனா பாதிப்பு ஏப்ரல் மாத மத்தியில் திடீரென வேகமெடுத்தது. கரோனா நம்மை விட்டு போயே போச்சு என்று முகக்கவசங்களை எல்லாம் வானில் தூக்கி எறிந்து மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தபோதுதான் இது நிகழ்ந்தது.

தொடர்ந்து முகக்கவசம் கட்டாயம், தடுப்பூசி முகாம்கள் என கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது.

இதன் காரணமாக, மே 6ஆம் தேதி சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக இருந்தது தற்போது 200 ஆகக் குறைந்துள்ளது. சென்னை ஐஐடியிலும் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் அடையாறு மண்டலத்தில் மட்டும் அந்த நாளில் 141 கரோனா நோயாளிகள் இருந்ததாக புள்ளிவிவரம் சொல்கிறது.

மே 1ஆம் தேதி 347 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போதுஇது 222 ஆகக் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 50 பேரும், தேனாம்பேட்டையில் 40 பேரும் கரோனா சிகிச்சையில் உள்ளனர். திருவொற்றியூர், மணலி, மண்டலங்களில் கரோனா நோயாளிகளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, முகக்கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மக்கள் தொடர்ந்து பின்பற்றினால், கரோனா இல்லாத சென்னையை படைக்க முடியும் என்றே கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT