முகப்பு
தமிழ்நாடு

ஆழியாறு, அமராவதி அணைகளிலிருந்து நீர் திறக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள ஆழியாறு மற்றும் அமராவதி அணைகளிலிரந்து பாசனத்துக்கு நீர் திறக்க நீர்வளத்துறையின்  கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 14 மே, 2022 at 3:28 PM
அமராவதி அணை (கோப்பிலிருந்து)
பகிர்:


தமிழகத்தில் உள்ள ஆழியாறு மற்றும் அமராவதி அணைகளிலிரந்து பாசனத்துக்கு நீர் திறக்க நீர்வளத்துறையின்  கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் தனித்தனி உத்தரவுகளில்,

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஐந்து வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு முதல் போக பாசனத்திற்கு 16.05.2022 முதல் 15.10.2022 முடிய தொடர்ந்து 152 நாட்களுக்கு ஆழியாறு அணையிலிருந்து 1205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், ஆணை மலை வட்டத்திலுள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை பழைய பாசனத்திற்குட்பட்ட முதல் எட்டு பழைய இராஜ வாய்க்கால்களின் (இராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப் பகுதிகளுக்கு எதிர்வரும் 16.05.2022 முதல் 28.09.2022 வரை 135 நாட்களில் 80 நாட்கள் தண்ணீர் திறப்பு 55  நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில் முதல் போக பாசனத்திற்காக அமராவதி அணையிலிருந்து 2074.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.