முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சிதம்பரத்தில் தனியார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயதப்படை காவலர் பெரியசாமி(26), துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
சிதம்பரத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ஆயுதப் படை காவலர் மு. பெரியசாமி
பகிர்:


சிதம்பரத்தில் தனியார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயதப்படை காவலர் பெரியசாமி(26), துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் புதன்கிழமை அதிகாலை தனது துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர், கடந்த மே 6-ஆம் தேதி முதல் இப்பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது தந்தை பெயர் முனுசாமி. சொந்த ஊர் சிதம்பரம் அருகே சேந்தரகிள்ளையில்  உள்ள  மணிகொல்லை தெருவைச் சேர்ந்தவர்.

Advertisement

சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் எஸ். ரமேஷ்ராஜ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments