நிறைவுபெற்றது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் 
தமிழ்நாடு

நிறைவுபெற்றது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது.

DIN

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது.

இதையடுத்து, நாளை முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வியாண்டுக்கான  மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 27ஆம் தேதிகள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 முதல் 9 வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த மே 6 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் 3,936 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதினார்கள். 

இந்த நிலையில் தமிழகத்தில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 முதல் 9 வரை நடைபெறவிருக்கிறது.

விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, தேர்வு முடிவுகள் வெளியானதும், 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவிருக்கிறது.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 1 - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

SCROLL FOR NEXT