தமிழ்நாடு

களக்காடு வனப்பகுதியில் விடப்பட்ட கரடி இறந்தது

DIN

களக்காடு: தென்காசி மாவட்டம், கடையம் அருகே ஞாயிற்றுக்கிழமை 3 பேரை கடித்துக் காயப்படுத்தியதால், வனத்துறையினரால் மயக்கஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனப்பகுதியில் விடப்பட்ட கரடி திங்கள்கிழமை இறந்த நிலையில் கரடியின் உடலுக்கு வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை எரியூட்டினர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் சரகத்துக்கு உள்பட்டது பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு. ஞாயிற்றுக்கிழமை (நவ.6) காலை கருத்தலிங்கபுரத்தைச் சேர்ந்த வைகுண்டமணி (55) என்பவர் பெத்தான்பிள்ளைக் குடியிருப்பில் உள்ள கடைகளுக்கு மசாலாப் பொருள்கள் கொண்டு சென்றார். அப்போது, கிராம எல்லையில் சாலையோரம் மறைந்திருந்த கரடி, அவர் மீது பாய்ந்து தாக்கியது.

மேலும், அங்கு வந்து கரடியை விரட்டிய அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சாத்து மகன்களான நாகேந்திரன் (64), சைலப்பன் (54) ஆகியோரையும் கரடி தாக்கியது. தகவலறிந்து அங்கு வந்த கிராம மக்கள் கடையம் வனத்துறையினருடன் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கரடியை சுட்டுப்பிடிக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, துணை இயக்குநர் செண்பகப்ரியா உத்தரவின்பேரில், வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் கரடியைப் பிடிக்கும் பணி நடைபெற்றது.

ராமையன்பட்டி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன், கால்நடை மருத்துவர் சிவமுத்து, வனத்துறை கால்நடை ஆய்வாளர் அர்னால்ட் அடங்கிய குழுவினர் மயக்க ஊசி செலுத்தி, கரடியை பிடித்தனர்.

பின்னர் அந்த கரடி ஞாயிற்றுக்கிழமை இரவு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு கோட்டம், களக்காடு சரணாலயம், முத்தலாறு சரகத்தில் விடப்பட்டு, வனத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தது.

இந்நிலையில், திடீரென திங்கள்கிழமை பிற்பகல் கரடி இறந்தது. இதையடுத்து, கரடியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குப் பின் தலையணையில் வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை எரியூட்டினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT