முகப்பு
தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:48 AM
பகிர்:

கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 11)  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மிகக் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →