சீர்காழியில் வரலாறு காணாத கனமழை: ஒரேநாளில் 44 செ.மீ மழைப் பதிவு!
தமிழகத்தில் சீர்காழியில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. ஒரே நாளில் 44 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுசீர்காழியில் வரலாறு காணாத கனமழை: ஒரேநாளில் 44 செ.மீ மழைப் பதிவு!
தமிழகத்தில் சீர்காழியில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. ஒரே நாளில் 44 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சீர்காழியில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. ஒரே நாளில் 44 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுமையம் மேலும் கூறுகையில்,
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சீர்காழியில் ஒரேநாளில் 44 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. இது 122 ஆண்டுகளில் இல்லாத மழைப் பொழிவாகும்.
சீர்காழியில் கனமழை பெய்ததற்கு மேகவெடிப்பு காரணமல்ல. மேக வெடிப்பாக இருந்தால் அதிக மழைப்பொழிவுக்கு முன்பும், பின்பும் மழை இருக்காது என்று தெரிவித்துள்ளது.
ஒரேநாளில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் பூச்சிகள், பாம்புகள் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வேட்டங்குடி, நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகள் குளம் போல் நிரம்பியுள்ளன. வேளாண் நிலங்கள் மழைநீர் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கின்றன.