தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் குறைய வாய்ப்பு!
தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வலு குறைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை ஒட்டி நிலவுகிறது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும்.
இதையும் படிக்க: திருமண ஒளிபரப்பு உரிமையை விற்ற மற்றொரு தமிழ் நடிகை!
இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 15-ம் தேதி வரை சில இடங்களில் மிதமான மழை பெய்ய மட்டுமே வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.