தமிழ்நாடு

குஜராத்தில் காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர்களாக 42 பேர் நியமனம்!

குஜராத் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

DIN


குஜராத் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிச. 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

தேர்தலையொட்டி குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

ஒவ்வொரு பகுதி வாரியாக பார்வையாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  அதன்படி குஜராத் தெற்கு பகுதிக்கு முகுல் வாஸ்னிக், சௌராஷ்ட்ரா பகுதிக்கு மோகன் பிரகாஷ், மத்திய பகுதிக்கு பிரித்விராஜ் சவான், வடக்கு - பிகே ஹரி பிரசாத் என மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதுபோல, மக்களவைத் தொகுதி வாரியாகவும் பார்வையாளர்களை நியமித்து மொத்தமாக 42 பேர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT