தமிழ்நாடு

எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை? 

தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள, செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை(நவ.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN


தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள, செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை(நவ.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. 

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு உள்பட குன்றத்தூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் திங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் நன்மங்கலம், வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், அனகாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளி, நன்மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி, மானாம்பதி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை(நவ.14) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT