தமிழ்நாடு

ஒசூரில் ஐபோன் தொழிற்சாலை; 53,000 பேருக்கு வேலை: தங்கம் தென்னரசு தகவல்

DIN

ஒசூரில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை அமைய உள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த புதிய ஆலையில் 3 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும்  அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 53,000 பேரை பணிக்கு அமர்த்த உள்ளதாகவும் கூறியுள்ளார். 

ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் தங்கள் தொழிற்சாலையை விரிவுபடுத்த உள்ளதாகவும் அதன்படி, இந்தியாவின் மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஒசூரில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 

முன்னதாக, ஒசூரில் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை அமையவுள்ளதாக மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தில்லியில் நடைபெற்ற விழாவில் குறிப்பிட்டார். அப்போது, புதிய ஐபோன் தொழிற்சாலையில் 60,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அவர்களில் 6,000 பணியாளா்கள், ராஞ்சி மற்றும் ஹஜாரிபாக் பகுதிகளைச் சோ்ந்த பழங்குடியினர் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் குடும்பம்! ஒருவர் பலி!

SCROLL FOR NEXT