தமிழ்நாடு

தமிழகத்தில் தினசரி 4,500 பேருக்கு மெட்ராஸ் ஐ: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மெட்ராஸ் ஐ நோய்க்கு இதுவரை 1.50 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மெட்ராஸ் ஐ விரைந்து பரவும் தன்மையுடைய நோய் என்பதால் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மக்கள் சுயமாக சிகிச்சை எடுக்கக் கூடாது. மெட்ராஸ் ஐ நோய் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. யாருக்கும் இதுவரை கண்பாதிப்பு ஏற்படவில்லை.

தமிழகத்தில் தினசரி 4,500 பேர் வரை மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுகின்றனர். மெட்ராஸ் ஐ பாதித்தால் குடும்ப நபர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வது நல்லவது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT