கோப்புப்படம் 
தமிழ்நாடு

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

DIN

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கல்லூரி மாணவா் கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடா்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனா். இதேபோல, கோகுல்ராஜின் தாய் சித்ரா, சிபிசிஐடி தரப்பில், 5 போ் விடுதலை செய்ததை எதிா்த்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வில் தொடா்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை, உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை அழைத்து வந்து நீதிபதிகள் முன் விசாரணை நடைபெற்றது. அப்போது சுவாதி உண்மையைக் கூற மறுத்துள்ளார். நீதிமன்றத்தில் உண்மையைக் கூற மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படும் என சுவாதிக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் 

சுவாதி, அவரது பெற்றோா், குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைத் தொடா்ந்து வழங்கவும், காவல் துறை, குற்றவாளிகள் தரப்பில் அவரை அணுகக் கூடாது என்றும் தெரிவித்து விசாரணையை வருகிற 30 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

நீதிமன்ற உத்தரவுப்படி நாமக்கல் வளையப்பட்டியில் உள்ள சுவாதியின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூலினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

ஊழல் வழக்குகளில் ஜாமீனில் வந்தவர்கள் எதிரணியினர்! பிகாரில் மோடி பேச்சு

ஆம்னி பேருந்து கோர விபத்தில் 23 பேர் பலி: மாவட்ட ஆட்சியர் தகவல்

வடகிழக்குப் பருவமழையின் முதல் புயல் பெயர் மொந்தா!

சென்னையில் ரூ.42.45 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா திறப்பு!

SCROLL FOR NEXT