கோப்புப்படம் 
தமிழ்நாடு

கடலில் மூழ்கி மாயமான பிளஸ் 2 மாணவர் சடலமாக மீட்பு 

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதி கடலில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய பிளஸ் 2 மாணவர் உடல் இன்று சடலமாக மீட்கப்பட்டது. 

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதி கடலில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கிய பிளஸ் 2 மாணவர் உடல் இன்று சடலமாக மீட்கப்பட்டது. 

தூத்துக்குடி, சவேரியார்புரம், திரேஸ் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ராஜன் மகன் கிஷோர்(17). அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், தனது நண்பர்களுடன், தாளமுத்து நகர் கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாராம். 

அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில், கடலோரப் பாதுகாப்புப் படை காவல் துறையினரும், தாளமுத்துநகர் காவல் துறையினரும், அப்பகுதி மீனவர்களும் சேர்ந்து மாணவரை தேடினர். 

இரவு வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில்  பள்ளி மாணவர் சிறுவன் கிஷோர் உடல் வெள்ளப்பட்டி கடற்கரையில் சடலமாக இன்று மீட்கப்பட்டது. 

இதையடுத்து காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT