தமிழ்நாடு

பாஜக ஆட்சிக்கு வந்ததே ஹிந்தியை திணிப்பதற்காகவே: முதல்வர் மு.க.ஸ்டாலின்

DIN

பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே ஹிந்தியை திணிப்பதற்காக என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி எதிர்ப்பு தொடர்பாக தனித்தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள், அம்மொழிகளை பேசும் மக்களின் நலனுக்கு எதிரான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கூடாது. அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இரு மொழிக்கொள்கை தீர்மானத்துக்கு எதிராக நாடளுமன்றக்குழு பரிந்துரைகள் உள்ளன.

பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே ஹிந்தியை திணிப்பதற்காக உள்ளது. மத்திய அரசின் இதயம் ஹிந்திக்காகவே துடிக்கிறது.

அனைத்து இந்திய தேர்வுகளையும் ஹிந்தி மயமாக்க துடிக்கிறார்கள் எனவும், ஹிந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பணி பெற முடியாத வகையில் ஹிந்தி மொழி திணிப்பு உள்ளது.

தமிழ் மொழி இந்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக கருதப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

பம்பை: வாகன நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத் தரவரிசை: 168 ஆவது இடத்தில் கேஐஐடி பல்கலைக்கழகம்

SCROLL FOR NEXT