தமிழ்நாடு

நாளை அதிமுக போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு

DIN

அதிமுக நாளை நடத்த திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர் செல்வத்துக்கு பதிலாக, ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்குள் முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து, அமைச்சர் துரைமுருகனின் வலியுறுத்தலுக்கு ஏற்ப பழனிசாமி அணியினர் இன்று ஒருநாள் அவையில் பங்கேற்க தடை விதித்து அவைத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். 

இதனால், அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் அனைவரும், அவைத் தலைவருக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு அவைக்கு வெளியே தர்னாவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவரைக் கண்டித்தும் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்க வலியுறுத்தியும் இபிஎஸ் தரப்பினர் நாளை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை(புதன்கிழமை)  உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். நாளை காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை அதிமுக நடத்த திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி தரவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT