எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்பதை சட்டப்பேரவையில் அறிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர் செல்வத்துக்கு பதிலாக உதயகுமாரை நியமிக்க கோரியதை அங்கீகரிக்க வலியுறுததினர்.
இதையும் படிக்க: சபாநாயகருடன் இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு!
பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடர அனுமதிக்கக் கூடாது என கோரிக்கைவிடுத்த நிலையில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்பதை சட்டப்பேரவையில் அறிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.