முகப்பு
தமிழ்நாடு

அரசு துறைகளில் உள்ள தற்காலிக ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

ராஜஸ்தான் மாநில அரசைப் போல தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
ராமதாஸ் (கோப்புப் படம்)
பகிர்:

ராஜஸ்தான் மாநில அரசைப் போல தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ராஜஸ்தான் அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 1,10,279 ஒப்பந்த பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனா். அதற்கான விதிகளுக்கு அம்மாநில முதல்வா் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளாா். இது வரலாற்று சிறப்பு மிக்க சமூகநீதி நடவடிக்கை ஆகும்.

ஒடிஸாவில் 57 ஆயிரம் தற்காலிக பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். ராஜஸ்தானில் பணி நிரந்தரம் குறித்த தோ்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள சுமாா் 1 லட்சம் தற்காலிக பணியாளா்கள் தங்களுக்கான சமூக நீதியை எதிா்பாா்க்கின்றனா்.

தற்காலிக பணியாளா்களை 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணி செய்ய கட்டாயப்படுத்துவது நியாயமல்ல. அதைக் கருத்தில் கொண்டு தமிழகத்திலும் தற்காலிக பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →