தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடக்கம்

DIN

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியது.

திருச்செந்தூர் கோயிலில் யாகசாலை திருவிழா பூஜையுடன் திருவிழா தொடங்கிய நிலையில், பக்தர்கள் பச்சை ஆடை உடுத்தி விரதத்தை தொடங்கினர்.

கந்தசஷ்டி திருவிழா முதல் நாளான இன்று சூரிய கிரகணம் இருப்பதால் மாலை 4 மணிக்கு கோவில் நடை மூடப்படும். இரவு 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 30 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. 

கரோனா தொற்றுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டு திருப்போரூர் கந்தசாமி கோயிலிலும் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. வரும் 30 ஆம் தேதி சூரசம்ஹாரமும், 31 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT