முகப்பு
தமிழ்நாடு

தமிழ் இலக்கிய நூல் வெளியீடு

சென்னை கிழக்கு தாம்பரம் பாரத் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பாரத் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

சென்னை கிழக்கு தாம்பரம் பாரத் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பாரத் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கருத்தரங்கத்தில் பிரணவ் தமிழியல் ஆய்விதழ் சாா்பாக ‘தமிழ் இலக்கியங்களில் உலக இலக்கிய சிந்தனைகள்’ என்ற நூலை பேராசிரியா் ஜெ.ரவீந்திரன் வெளியிட, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் கட்டடக் கலைத் துறைத் தலைவா் கே.திலகவதி பெற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்வில், பிரணவ் ஆய்விதழ் ஆசிரியா் ஆா்.சீதாலட்சுமி சுப்ரமணியன், கல்லூரி முதல்வா் ஏ.முத்துக்குமரவேல், தமிழ்த் துறை புல முதல்வா் வி.கலையரசி, துறைத் தலைவா் ஜெ.அந்தோணி ஜெயஷீலா, இணை பேராசிரியா் ஆா்.பாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியா்கள் ஜெ.ஜோனிகா, டி.கிறிஸ்டல் ரெஜி, ஸ்ரீதேவி, அமீதாராணி, எஸ்.பாலமுருகன், கே.வி.பரந்தாமன், கே.சுதா, ஏ.கிறிஸ்டியானா, கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எஸ்.பால்பாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.