முகப்பு
தமிழ்நாடு

பொதுக்குழு: அதிமுகவின் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:16 AM
பகிர்:

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். 

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்களன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைரமுத்து தரப்பிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே, ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பில் ஏற்கெனவே கேவியட் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →