தமிழ்நாடு

ராகுலின் நடைப் பயணத்தைத் தொடக்கிவைத்தார் மு.க.ஸ்டாலின்!

DIN

கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.  

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் (பாரத் ஜோடோ யாத்) கன்னியாகுமரியில் இருந்து இன்று மாலை தொடங்குகிறது. கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீா் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,600 கி.மீட்டரை 148 நாள்கள் பயணம் செய்கின்றனர்.

இந்த பயணத்தின்போது ராகுல் காந்தியோ, கட்சியின் மூத்த தலைவர்களோ எந்தவொரு நட்சத்திர விடுதிகளிலும் தங்கவில்லை. இவர்கள் தங்குவதற்காக 60 கேரவன்கள் தயார்நிலையில் உள்ளன. மேலும், இது மிகவும் எளிமையான நடைப்பயணமாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்று கன்னியாகுமரி வந்த ராகுல் காந்தி முன்னதாக, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட படகில் சென்றார். அங்கு விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடைபெற்ற இசையஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினும் உடனிருந்தார். 

தொடர்ந்து, ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.  நடைப் பயணத்தைத் தொடக்கி வைக்கும் விதமாக அவர் தேசியக் கொடியை ராகுலிடம் வழங்கினார்.

ராகுல் காந்தி முதல்நாளான இன்று 600 மீட்டர் நடைப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்றைய நடைப்பயணத்தில் கலந்துகொள்கின்றனர். மேலும் காங்கிரஸ் எம்.பி.க்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

கீழ்வேளூரில் 6-ஆவது நாளாக மழை

வேட்டையன் - ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

பார்க்க பளபளவென இருந்தால் ஏமாறாதீர்கள்! பழங்களும் ரசாயனங்களும்

அதிகரிக்கும் நட்சத்திர இணைகளின் விவாகரத்து.. என்ன காரணம்?

SCROLL FOR NEXT