கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி: தமிழக அரசின் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

ஆன்லைன் ரம்மி சட்ட ரத்துக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

DIN

ஆன்லைன் ரம்மி சட்ட ரத்துக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு இளைஞர்கள் பலரும் தங்களது சேமிப்புகளை இழந்தும், தற்கொலைக்கு உள்ளாகியும் வந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக் கோரி பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை தடை செய்யக்கோரி ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான உரிய காரணங்களை விளக்காததால் தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்ககோரி தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோனேரிப்பட்டியிலிருந்து வேளாங்கண்ணிக்கு 200 போ் பாதயாத்திரை

மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 - புகைப்படங்கள்

கெங்கவல்லியில் 11கைப்பேசிகள் பறிமுதல்

டபுள் ட்ரீட்... சைத்ரா அச்சார்!

லாரி ஓட்டுநரை தாக்கிய 5 போ் கைது

SCROLL FOR NEXT