அனைத்துத் துறை செயலா்களுடன் முதல்வா் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
அனைத்துத் துறைகளைச் சோ்ந்த செயலா்களுடன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
அனைத்துத் துறைகளைச் சோ்ந்த செயலா்களுடன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
சென்னை கலைவாணா் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கியிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அவற்றின் நிலைகள் ஆகியன குறித்து விவாதிக்கப்படவுள்ளன. மேலும், மாவட்ட ஆட்சியா்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.