கோப்புப்படம் 
தமிழ்நாடு

நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக் கூடாது: நடிகர் கமல்

நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக் கூடாது என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

DIN

நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக் கூடாது என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார். 

கோவை கே.ஜி. திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பு அலங்கார வளைவுகள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.  முன்னதாக திரையரங்க ஊழியர்களை நினைவு பரிசுகளை கமல்ஹாசன் வழங்கினார். 

அதில் கமல்ஹாசன் பேசியதாவது:  

சினிமாவில் நடிக்க ஆரம்பத்தில், என்னை 'நீ தான் அந்த பிள்ளையா' என கேட்ட போது மகிழ்ச்சி அளித்தது.  ஆனால் ஆரம்ப காலத்தில் நான்கு படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டுக்கவில்லை. அதை மாற்றவும் உழைத்தேன். சினிமாவில் சாதித்தது எனக்காக மட்டும் என பெருமை படுத்திக்கொள்ள முடியாது. 

வாந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போன்று சினிமாவும் தான். 63 ஆண்டு காலமாக என்னை வாழ வைத்துள்ளது. 

நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது. ஒரு வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது சிறந்த திரைப்படங்கள் எடுக்க உத்வேகமாக அமையும். நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள். 

மக்கள் வாழ்த்தினால் சம்பளம் இரண்டு மடங்கு ஆகும். என்னை மட்டுமல்ல.  நன்றாக நடிக்கும் நடிகரை வாழ்த்துங்கள். எங்கள் சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும். 

வட இந்தியாவில் பயப்படுகிறார்கள், தென் சினிமா பக்கம் அனைவரின் பார்வை திரும்பிவிட்டது. என் குடும்பமும் சினிமாவில் தான் இருக்கிறது. புதிதாக வரக்கூடிய நடிகர்களை உற்று கவனித்து வருகிறேன்.  என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக் கொள்கிறேன். 

எனக்கு பிடித்த ஊர் கோவை. கோவையில் விக்ரம் க்ளைமேக்ஸ் படம் எடுக்கும் போது எனக்கு கரோனா வந்து விட்டது. ராஜ்கமல் நிறுவனம் 53 வது படத்தை தயாரித்து வருகிறது. 

ஏ.சி., மின்விசிறி வந்தாலும் ஏரிக்கரை காற்று போல் வராது. அதுபோலத்தான் திரையரங்கிற்கு சென்று திரைப்படம் பார்ப்பது என்று விக்ரம் திரைப்பட 100-வது நாள் விழாவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

இதையடுத்து திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்புரமணியம் பேசியதாவது, 

கோவையில் நூறாவது நாள் விழாக்கள் கொண்டாடி 15 வருடங்கள் ஆகியுள்ளது. கமல் வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. அவர் வந்தது வந்தது மகிழ்ச்சி. நூறு ஆண்டுகள் சினிமா வரலாற்றில் விக்ரம் 2 தான் ரெக்கார்டு ப்ரேக் கலெக்சன் எடுத்துள்ளது. கமல் அரசியலில் இருந்தாலும், எங்கு இருந்தாலும் சினிமா தான் அவருடைய உயிர் மூச்சு. 

சினிமாவின் அடுத்தகட்ட பரிமாற்றம் வழி வகுத்தவர் கமல்ஹாசன். திரையரங்குகள் எப்போதும் அழியாது என சொல்லியவர் கமல்ஹாசன். அதிநவீன டெக்னாலஜி  தமிழ் சினிமாவில் புகுத்தியவர் கமல்ஹாசன். உலக நாயகன் வார்த்தைக்கு 100 க்கு 200 சதவீதம் பொருத்தமானவர். 

திரைப்பட வர்த்தகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மூலம் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. கமல்ஹாசன் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT