தமிழ்நாடு

பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!

சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

DIN

சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் ஜான்சன்பேட்டை பிள்ளையார்நகர் பகுதியை சேர்ந்த சிவகுரு என்பவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அரசகுரு(13). அருகிலுள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல்  வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில் பெற்றோர்கள் அரசகுருவை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் இன்று பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று பெற்றோர்கள் கூறியிருந்த நிலையில், நேற்றிரவு வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அரசகுரு தூக்கிட்டுத்  தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்கள், பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுத்தனர். உடனே அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மாணவன் அரசகுரு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் மாணவனுக்கு ஏதாவது பிரச்னை இருந்து வந்ததா அல்லது வேற ஏதாவது காரணங்கள் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT