முகப்பு
தமிழ்நாடு

இருநாள் பயணமாக தமிழகம் வந்தார் ஜெ.பி.நட்டா!

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இரு நாள்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இரு நாள்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜெ.பி. நட்டா பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் இருநாள்கள் பயணமாக அவர் தமிழகம் வந்துள்ளார். இன்று பிற்பகல் அவர் விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார். 

மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஜெ.பி.நட்டாவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

மதுரையில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் அவர், காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 

பின்னர் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 

ஜெ.பி.நட்டா வருகையையொட்டி பாஜகவினர் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →